உலகின் ஆகப் பரபரப்பான வர்த்தக வழிகளில் ஒன்றான சுவஸ் (Suez) கால்வாயில் குறுக்கே நிற்கும் ஒரு பெரிய சரக்குக் கப்பலால், கால்வாயின் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
(காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: MarineTraffic.com )
காற்று கப்பலை அவ்வாறு தள்ளியதாகக் கப்பலை இயக்கியவர் கூறினார்.
400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்ட கப்பலை மீட்டெடுக்க இயந்திரங்களும், வாகனங்களும் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது.
அது நெதர்லந்துக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
(காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: MarineTraffic.com )
கப்பலுக்குத் தேவையான உதவி சென்று சேர, கப்பலின் இயக்குநரான Evergreen Marine Corp நிறுவனம் கால்வாயின் நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
போக்குவரத்து தடைபட்டதால், 100க்கும் அதிகமான கப்பல்கள் கால்வாயைக் கடந்து செல்ல காத்துக்கொண்டிருப்பதாக Bloomberg செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
சுவஸ் கால்வாய் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்டது.
அது உலகின் ஆக முக்கியமான வர்த்தக வழிகளில் ஒன்றாகும்.
அனைத்துலக கடல்துறை வர்த்தகத்தில், சுமார் 10 விழுக்காடு அதைக் கடந்து செல்கிறது.
(படம்: Instagram/fallenhearts17)
சென்ற ஆண்டு, சுமார் 19,000 கப்பல்கள் கால்வாயைக் கடந்து சென்றன. அதில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளின் மொத்த எடை 1 பில்லியன் டன்னுக்கும் அதிகம்.