QR குறியீடு பற்றிய தகவல்கள்.. – TamilSeithi News & Current Affairs

Spread the love


உணவங்காடிகள், கடைகள், கண்காட்சிகள் எனப் பல பொது இடங்களில் நாம் QR குறியீடுகளைப் பார்த்திருப்போம்.

QR குறியீடுகளைக் கொண்டு பணம் செலுத்துதல், தகவல் பரிமாற்றம் , செயலியைப் பதிவிறக்கம் செய்தல் எனப் பல வேலைகளைச் செய்யலாம்.

QR குறியீடுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள இணையப் பாதுகாப்பு வல்லுநர் கணேஷ் நாராயணனை “செய்தி” அணுகியது.
அவர் கொடுத்த விளக்கங்கள் இதோ:

QR குறியீடு என்றால் என்ன?

*Quick Response என்பது QR குறியீட்டின் முழு விரிவாக்கம்

*ஓர் இணையப்பக்கத்தை எளிதில் அணுகவோ, செயலியைப் பதிவிறக்கம் செய்யவோ QR குறியீடுகளை Scan செய்தால் போதும்; அது நமக்குத் தேவையான தகவல்களைத் தரும்.

*தற்போது வெளியிடப்படும் கைத்தொலைபேசிகளில் QR குறியீடுகளை Scan செய்யும் தொழில்நுட்பம் கேமராக்களிலேயே உள்ளது.

*QR குறியீடுகளை Scan செய்ய செயலிகளும் உள்ளன.

*QR குறியீடு இரண்டு பரிமாண அடையாளக் குறியீடுகளால் (Barcode) உருவாக்கப்படுகிறது.

QR குறியீட்டின் பயன்கள் :

*வர்த்தகத்தை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது

*வேகமாக இணையப் பக்கத்திற்குச் செல்லும் வசதி

*செயலிகளை எளிதாக நாடுவது

QR குறியீட்டில் உள்ள சிரமங்கள் :

*மக்களுக்குப் போதிய தொழில்நுட்ப ஆற்றல் இல்லாதது

*கைத்தொலைபேசியில் Scan வசதி இல்லாதது.

*பாதுகாப்புக் குறைபாடுகள்

என்ன பாதுகாப்புக் குறைபாடுகள் ?

*இணையத்தில் 25க்கும் மேற்பட்ட QR குறியீட்டுத் தயாரிப்புப் பக்கங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன.

*அதனால் எளிதில் நச்சுநிரல்களை ஊடுருவிகள் Barcode மூலம் பரப்பலாம், அதன் விளைவாக நம் தொலைபேசியில் உள்ள தனிநபர் தகவல்கள் திருடப்படலாம்.

பாதுகாப்பான QR குறியீடுகளை எப்படி உருவாக்குவது ?

பாதுகாப்பான QR குறியீடுகளைத் தயாரிக்கும் பணியைக் கணினி நிபுணரிடம் ஒப்படைப்பது நல்லது. அவர்கள் தனிநபர் தகவல்களை ஊடுருவிகள் திருடாமல் இருக்க பல தொழில்நுட்ப அம்சங்களை இணைக்கின்றனர். 





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *