Pune Industrial Sector warns to Maharashtra Government | “நோ லாக் டவுன்” முழு ஊரடங்கு போடக்கூடாது என அரசுக்கு எச்சரிக்கை

Spread the love


புனே, 31 மார்ச் 2021: மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களில் கொரோனா தொற்று கடுமையாக அதிகரித்துள்ளன. மேலும் மாநிலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புனே ஒன்றாகும். இந்த நகரத்தில் தினமும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்று பதிவு செய்யப்படுகின்றன. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு (Maharashtra Government) கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

அங்கு இரவு எட்டு முதல் காலை ஏழு வரை என இரவு ஊரடங்கு (Night Curfew) உத்தரவை மகாராஷ்டிரா அரசாங்கம் விதித்துள்ளது. மேலும், மாவட்டத்தில் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படுவது குறித்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

முழு ஊரடங்கு (Lockdown Decision) தொடர்பான முடிவு ஏப்ரல் 2 ஆம் தேதி எடுக்கப்படும் என்று புனே மாவட்ட காவலர் அஜித் பவார் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், தொழில்துறை துறை நிறுவனங்கள் முழு ஊரடங்கை எதிர்க்கிறது.

ALSO READ | ஏப்ரல் 30-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வேலையின்மை குறித்த பயம்: 
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசிய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பின் நிர்வாகி சுனிட்டி எஸ்.ஆர் (Suniti SR) கூறுகையில், “ஊரடங்கை (Lockdown) மீண்டும் திணிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். குடிமக்கள் பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கடந்த ஆண்டின் பொது முடக்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிக்கலில் ஆழ்த்தியது. இப்போது தான் அவர்களின் வாழ்க்கை தரம் கொஞ்சம் சிறப்பாகி வருகிறது. ஒருவேளை பொது முடக்கத்தை தவிர்க்க முடியாவிட்டால், இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு (Migrant Workers) தேவையான அனைத்து வசதிகளையும் அரசு தரப்பில் செய்து தரவேண்டும், அதற்காக பொதுமுடக்கத்தை குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்கப்பட வேண்டும். கடந்த பொதுமுடக்கத்தை அடுத்து மக்கள் இரண்டு முறை கூட சரியாக சாப்பிட வழியில்லை. எனவே, அரசாங்கம் அவர்களுக்கு அத்தியாவசியமான பொருட்களையும் (Essential Things) குறைந்த விலையிலும் வழங்க வேண்டும்” என்றார்.

“ஏற்கனவே போடப்பட்ட கொரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்த மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்புகளில் இருந்து இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை. இன்றும் பலர் வேலையில்லாமல் (Unemployed) உள்ளனர். அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் (Lockdown Again) அறிவித்தால் வேலையின்மை மீண்டும் அதிக அளவில் அதிகரிக்கும்” என்கிறார் சுனிட்டி.

கட்டுமான பணிகள் நிறுத்தப்படக்கூடாது: 
புனே மாவட்டத்தில் மீண்டும் முழு ஊரடங்கு போடக்கூடாது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. முழு ஊரடங்கு தவிர்க்க முடியாதது என்றால் குறைந்தபட்சம் கட்டுமானத் துறை பணிகளை நிறுத்தக்கூடாது. கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் தொழிலாளர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தொழில் வல்லுநர்கள் செய்துள்ளனர். தேவைக்கேற்ப அவர்களுக்கு தடுப்பூசி போடவும் அவர்கள் தயாராக உள்ளனர். முழு ஊரடங்கு பொருளாதாரத்தை பாதிக்கும் என்று புனே மெட்ரோவின் கிரெடாய் தலைவர் சுஹாஸ் மர்ச்சண்ட் (Suhas Marchant) கூறினார்.

ALSO READ | அதிகரிக்கும் Corona, இந்த இடங்களில் மீண்டும் Lockdown போடப்படுமா?

முழு ஊரடங்கு வேண்டாம் என்று கோரி முதல்வருக்கு அனுப்பிய கடிதம்:
மராத்தா வர்த்தக, தொழில் மற்றும் வேளாண்மை (எம்.சி.சி.ஐ.ஏ – MCCIA) தலைவர் சுதீர் மேத்தா (Sudhir Mehta), “குடிமக்கள் விதிகளை பின்பற்ற வேண்டும். முழு ஊரடங்கு என்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் மாத சம்பளம் வாங்குவோருக்கு குறிப்பிடத்தக்க சிக்கல்களை உருவாக்கும். குறுகிய கால முழு ஊரடங்கால் பயனில்லை. தற்போதைய பொருளாதார நிலைமையைப் பொறுத்தவரை, இன்னும் நீண்ட காலத்திற்கு முழு ஊரடங்கு என்பது முடியாதது. எனவே முழு ஊரடங்கிற்கு கடுமையான எதிர்ப்பு உள்ளது. மேலும் முழு ஊரடங்கு போடக்கூடாது என்ற கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: