“MI 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விரைவில் வெளியாகும்!” – சியோமி | Xiaomi tweets that the company will launch MI 11 Series Smartphone in India very soon | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Spread the love


Xiaomi-tweets-that-the-company-will-launch-MI-11-Series-Smartphone-in-India-very-soon

சியோமி நிறுவனம், இந்தியாவில் விரைவில் MI 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனை ட்விட்டரில் தெரிவித்துள்ள அந்நிறுவனம் எப்போது வெளியாகிறது என்பதை அறிவிக்காமல் உள்ளது. கடந்த மாதம் MI 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என சியோமி தெரிவித்துள்ளது. 

இருப்பினும் இந்த ட்வீட்டில் எந்த மாடல் போனை சியோமி வெளியிட உள்ளது என்பதை குறிப்பிடவில்லை. 11 புரோ மற்றும் 11 அல்ட்ரா என இரண்டு மாடல்களை வரும் 29-ஆம் தேதி வெளியிட உள்ளதை சியோமி முன்னதாக உறுதி செய்திருந்தது. அதனுடன் 11 லைட் ஸ்மார்ட் போனும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

11 புரோ மற்றும் 11 லைட்டில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் மெமரி இருக்கும் என;த தெரிகிறது. 11 புரோவின் மற்றொரு வேரியண்டில்  12 ஜிபி ரேம் இருக்கும் எனத் தெரிகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *