Spread the love
Images
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சமூக ஊடகமான Instagram ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகளில் ‘likes’ எனும் விருப்பக் குறியீட்டை மறைக்கத் தொடங்கியுள்ளது.
அதாவது, அடுத்தவர்களின் பதிவுகளுக்கு எத்தனை விருப்பக் குறியீடுகள் வந்தன என்பதை இனி யாராலும் காணமுடியாது.
மனரீதியாகப் பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படும் விமர்சனங்களை முன்னிட்டு Facebook-இன் கீழ் செயல்படும் Instagram இத்தகைய நடவடிக்கையை அறிமுகம் செய்வதாகத் தெரிவித்தது.
கனடாவில் அந்தச் சோதனை முயற்சி கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, இத்தாலி, அயர்லந்து, ஜப்பான், பிரேசில், நியூசிலந்து ஆகிய நாடுகளுக்கு அந்தச் சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.