IPLI 2021 : இது ரோஹித் Vs கோலி கேப்டன்ஸி மோதல்… அசால்ட் ரோஹித், தவறுகளைத் திருத்துவாரா கோலி? | Mumbai Indians Vs Royal Challengers Bangalore IPL 2021 match Preview

Spread the love


7. இளம் திறமைசாலிகள்!

2016 ஐபிஎல் தொடருக்குப்பின் முதல்முறையாக கடந்த ஆண்டுதான் ப்ளே ஆஃபுக்குள் நுழைந்தது ஆர்சிபி. இந்த வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணம் அணிக்குள் கண்டறியப்பட்ட இளம் திறமையாளர்கள். தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், சைனி, சிராஜ், ஜோஷ் ஃபிலிப்பே என பல இளம் வீரர்கள் கடந்தாண்டு சிறப்பாக விளையாடினார்கள். இந்தாண்டு ஃபிலிப்பேவுக்கு பதில் இன்னொரு இளம் நியூஸிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் இணைந்திருக்கிறார். அதனால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளித்து அணிக்கள் நல்ல காம்போவை கோலி உருவாக்குவார் என எதிர்பார்க்கலாம்.

8. சிம்ப்பிள் லாஜிக்கில் ரோஹித் ஷர்மா!

தொடர்ந்து ஐபிஎல் கோப்பைகளை வெல்லும் அலுப்பில் இருக்கும் ரோஹித் ஷர்மா, பெங்களூருவை வீழ்த்த மாஸ்டர் பிளான்கள் எதுவும் போடவேண்டியதில்லை. விளையாடும் 11 வீரர்களுமே பர்ஃபார்மர்கள் என கெத்தாக இருக்கிறது மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா, குவின்டன் டிகாக், சூர்யகுமார், இஷான் கிஷன், பாண்டியா பிரதர்ஸ், பொலார்ட், நீஷம் என அதிரடி பேட்ஸ்மேன்களையும், ஆல்ரவுண்டர்களையும் கொண்டிருக்கிறது மும்பை. கொரோனா க்வாரன்டைன் காரணமாக டிகாக் இன்றுவிளையாடமுடியாமல் போனால் இஷான் கிஷன் ஓப்பனிங் இறங்குவார். அவருடைய ஃபாரின் ஸ்லாட் ஒரு பெளலருக்குப் போகும்.

9. மும்பை பெளலர்ஸ்!

ட்ரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, பொலார்ட், ஹர்திக் பாண்டியா, ஜிம்மி நீஷம் என வேகப்பந்து – மிதவேகப்பந்து பெளலர்கள் 5 பேரை கொண்டிருக்கிறது மும்பை. இதில்லாமல் ராகுல் சஹார் அல்லது ஜெயந்த் யாதவ், க்ருணால் பாண்டியா என இரண்டு ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். டிகாக்கு பதில் கூல்ட்டர் நைல் அல்லது ஆடம் மில்னே அணிக்குள் வந்தால் 8 பேர் பெளலிங் போடுவார்கள் என்கிற பெரும்பலத்தோடு இருக்கிறது மும்பை.

10. பேட்டிங்கா, சேஸிங்கா?!

சென்னையில் பனிப்பிரச்னைகள் இல்லையென்றாலும் டாஸ் வென்றவுடன் சேஸிங் செய்யவே இரண்டு அணிகளும் விரும்பும். சென்னை பிட்சும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும் என்பதால் ஒரு பெரிய ஹை ஸ்கோரிங் போட்டியோடு 2021 ஐபிஎல் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்!



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *