IPL அணியை வாங்க குறைந்தபட்ச விலை 2000 கோடி… புதிய இரண்டு அணிகளை வாங்கப்போவது யார்? | bcci announces auction to own two ipl teams

Spread the love

யார் வாங்க முடியும்?!

ஆண்டுக்கு 3000 கோடிக்கு டர்ன் ஓவர் கொண்ட நிறுவனங்களே ஐபிஎல் அணியை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க முடியும். இது ஒரே நிறுவனமாகவும் இருக்கலாம் அல்லது மூன்று நிறுவனங்களின் கூட்டமைப்பாகவும் இருக்கலாம். ஆனால், மூன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது எனத் தெரிகிறது.

யார் யார் போட்டி போடுகிறார்கள்?

தற்போதைய நிலவரப்படி குஜராத்தைச் சேர்ந்த அதானி நிறுவனம், கொல்கத்தாவைச் சேர்ந்த கோயங்கா நிறுவனம், கேரளாவைச் சேர்ந்த முத்தூட் ஃபினான்ஸ் நிறுவனம் மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனம் என நான்கு நிறுவனங்கள் போட்டியில் முன்னிலையில் உள்ளன. இதில் குஜராத்தைச் சேர்ந்த அதானி நிறுவனத்துக்கு நிச்சயம் குஜராத் அணி கிடைத்துவிடும் எனத் தெரிகிறது. மற்றொரு அணிக்குத்தான் பெரும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

எந்தெந்த அணிகள்?

குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் என இரண்டு மாநிலங்களுக்கு புதிய ஐபிஎல் அணிகள் கிடைக்கும் என தெரிகிறது. குஜராத், லக்னோ இந்த அணிகளின் தலைமையகமாக இருக்கும்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: