Fulham அணியில் சிங்கப்பூரரின் முதல் ஆட்டம்

Spread the love


சிங்கப்பூர் இளையர் பென் டேவிஸ் இங்கிலாந்தின் ஃபுல்ஹாம் (Fulham) காற்பந்துக் குழுவைப் பிரதிநிதித்து முதல்முறையாக ஆட்டத்தில் களமிறங்கியிருக்கிறார்.

காரபௌ (Carabao) கிண்ணத்தில் லூக்கா டெ லா டொர்ரெவுக்குப் (Luca De Le Torre) பதிலாக ஆட்டத்தின் 89-ஆவது நிமிடத்தில் அவர் விளையாடத் தொடங்கினார்.

அவர் ஃபுல்ஹாம் குழுவுடன் ஈராண்டு ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தெரிவிக்கப்பட்டது.

டேவிஸ் தம்முடைய தேசிய சேவை கடமைகளை நிறைவேற்றவில்லை என்று இவ்வாண்டின் தொடக்கத்தில் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

தேசிய சேவையிலிருந்து விலக்களிக்கும்படி டேவிஸ் முன்வைத்த கோரிக்கையை அமைச்சு நிராகரித்தது.  

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *