ENG Vs IND : லார்ட்ஸில் வரலாற்று வெற்றியை நோக்கி இந்தியா… இங்கிலாந்து தடுமாற்றம்! LIVE UPDATES

Spread the love

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த், சிராஜ் மூவரும் தலா இரண்டு விக்கெட்கள் எடுக்க, பேட்ஸ்மேனாக அரை சதம் அடித்து அசத்திய முகமது ஷமி 1 விக்கெட் எடுத்திருக்கிறார்.

களத்தில் தற்போது ஜாஸ் பட்லரும், ஒலி ராபின்சனும் உள்ளனர். ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணியை தோல்வியில் இருந்து மீட்க போராடுகிறார். 57 பந்துகளை சந்தித்து 8 ரன்களுடன் போராடி வருகிறார் பட்லர்.

லண்டன் லார்ட்ஸில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட்டின் இறுதிநாள் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தியா வெற்றிபெற 3 விக்கெட்களையே வீழ்த்த வேண்டும் என்கிற நிலையில், இங்கிலாந்து ஆட்டத்தை டிரா செய்ய இன்னும் 21 ஓவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும்!

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: