COVID-19 தடுப்பூசியின் சமமான விநியோகம் குறித்து G7 மாநாட்டில் தலைவர்கள் கவனம்

Spread the love



G7 மாநாட்டில், நாடுகளுக்கு இடையில் COVID-19 தடுப்பூசியின் சமமான விநியோகம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

முதல்முறையாக இணையம் வழி நடைபெற்ற மாநாட்டில் கிருமிப்பரவல் சூழலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளியலைச் சீரமைப்பது குறித்து G7 நாடுகளின் தலைவர்கள் கலந்தாலோசித்தனர்.

உலக மக்கள் அனைவரும் ஒன்றாக இந்த நோய்ப்பரவலில் இருந்து மீண்டுவர ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி சென்றுசேரவேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கூறினார்.

G7 கூட்டமைப்புக்குத் தலைமைதாங்கும் பிரிட்டன், இம்முறை மாநாட்டை ஏற்றுநடத்தியது.

அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கலந்துகொள்ளும் முதல் G7 மாநாடு இது.

அதில் ஜப்பான் (Japan), பிரான்ஸ் (France), ஜெர்மனி (Germany), இத்தாலி (Italy), கனடா (Canada) ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

மாநாட்டுக்கு முன்னதாக, ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசி வழங்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் Covax திட்டத்திற்குத் திரு. பைடன், நான்கு பில்லியன் டாலர் வழங்குவதாக உறுதியளித்தார்.

பிரிட்டன், தன்னிடம்
தேவைக்கு அதிகமாக உள்ள தடுப்பூசிகளை ஐக்கிய நாட்டு நிறுவனத்திடம் கொடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், Covax திட்டத்திற்கு ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *