COVID-19 தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு உலகச் சுகாதார நிறுவனத்திடம் விண்ணப்பத்திருக்கும் Johnson & Johnson

Spread the love



Johnson & Johnson நிறுவனம், அதன் சொந்த COVID-19 தடுப்பூசிகளை அவசர நிலையில் பயன்படுத்துவதற்காக உலகச் சுகாதார நிறுவனத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.

ஒரு முறை போடப்படும் தடுப்பூசியை அதிகமானோர் பயன்படுத்துவதற்கான தகவல்களைச் சமர்ப்பித்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
உலகச் சுகாதார நிறுவனம் இணைந்து வழிநடத்தும் COVAX தடுப்பூசித் திட்டத்திற்குத் தடுப்பூசிகளை விநியோகம் செய்ய அந்த அனுமதியைப் பெறுவது அவசியம்.

ஏழை நாடுகளுக்கும் நடுத்தர வருமான நிலையைக் கொண்ட நாடுகளுக்கும் அந்தத் தடுப்பூசியை வழங்குவது திட்டத்தின் இலக்கு.
அமெரிக்கச் சுகாதாரக் கட்டுப்பாட்டு அமைப்பும் உணவு, மருந்து நிர்வாகக் குழுவும் தடுப்பூசிகளைப் பரிசோதித்து வருகின்றன.

அடுத்த வாரம் அதனைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாகக் கலந்துரையாடல் விரைவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தத் தடுப்பூசியைத் தென் ஆப்பிரிக்காவில் முதல்முறை பயன்படுத்துவதற்கான திட்டமும் இருப்பதாய் தெரிவிக்கப்பட்டது.

COVID-19ஐத் தடுப்பதில் அந்தத் தடுப்பூசி 66 விழுக்காட்டினருக்குப் பயனளிக்கும் என்பது சோதனையில் தெரியவந்ததாக Johnson & Johnson நிறுவனம் கூறியது. 





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *