COVID-19: இந்தியாவின் தடுப்பூசிக்கு 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒப்புதல் பெற முயற்சி

Spread the love


இந்தியாவின் COVID-19 தடுப்பூசியான COVAXIN-ஐ பயன்படுத்துவதற்கு 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒப்புதல் பெற முயன்று வருவதாக Bharat Biotech நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளுக்குத் தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாக நிறுவனம் கூறியது.

இருப்பினும் நாடுகள் குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவில் COVAXIN மருந்தை வர்த்தக ரீதியில் விநியோகிப்பது குறித்து அங்குள்ள Ocugen Inc நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக Bharat Biotech தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அவசரகால அடிப்படையில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளில் COVAXIN-உம் ஒன்று.

இருப்பினும், மருந்தின் செயல்திறன் குறித்து மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

அது மார்ச் மாதத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: