Champions League – கிண்ணத்தை வென்று சாதிக்குமா லிவர்ப்பூல் ?

Spread the love


Images

  • fOOTBALL

    (படம்: AFP)

11 ஆண்டுகளில் முதன்முறையாக இங்கிலீஷ் பிரிமியர் லீகைச் சேர்ந்த 2 அணிகள் UEFA சேம்பியன்ஸ் லீக்(UEFA Champions League) இறுதியாட்டத்தில் மோதவுள்ளன.

லிவர்ப்பூலும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரும் இன்று இறுதியாட்டத்தில் பொருதவுள்ளன.

பிரிமியர் லீக் (Premier League), கரபாவ் (Carabao) கிண்ணம், FA கிண்ணம் மூன்றையும் கைப்பற்றி வரலாறு படைத்த மென்செஸ்ட்டர் சிட்டியை(Manchester City) சேம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்றில் வென்றது ஸ்பர்ஸ் (Spurs).

அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்திற்குப் பிறகு 3 கோல் வித்தியாசத்தில் பின்னால் இருந்தபோதும் இரண்டாம் ஆட்டத்தில் 4-0 என்று பார்சலோனாவை (Barcelona) வென்று இறுதியாட்டத்திற்கு முன்னேறியது லிவர்ப்பூல்.

வீம்புடன் ஆடி வெற்றிகாண்பதன் அடையாளச் சின்னமாக விளங்குகின்றன 2 அணிகளும்.

லிவர்ப்பூல் நிர்வாகி யர்கன் கிளாப்(Jurgen Klopp), ஸ்பர்ஸ் நிர்வாகி மொரிட்சியோ பொச்சட்டினோ(Mauriccio Poche) இருவரில் சேம்பியன்ஸ் கிண்ணத்தை யார் வென்றாலும் அவருக்கு இது முதல் முறையாக இருக்கும்.

அதிகம் செலவு செய்து நட்சத்திரப் பட்டாளத்தை இறக்கிய அணிகள்தான் கடந்த சில ஆண்டுகளாகச் சேம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றுவருகின்றன.

அந்தப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து ஊக்கமும் உற்சாகமும் தந்துள்ளன ஸ்பர்ஸ், லிவர்ப்பூல்.

ஆட்டம் இன்று பின்னிரவு 3 மணிக்கு அரங்கேறும்.

அதுபற்றி உங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் நீங்கள் முன்வைக்கலாம், இரவு 9 மணிக்கு எங்கள் Facebook live-இல்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *