7 ஆண்டுகளுக்குப்பின்: லார்ட்ஸ் வெற்றி நாயகர்கள் பும்ரா, ஷமி, முகமது, இசாந்த்: கபிலுக்குப்பின் சிராஜ் | Bum-Shami Treat: India’s pacers script 151-run win over England

Spread the love


பும்ரா, ஷமி, சிராஜ், இசாந்த் சர்மா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்களும் சேர்்்த்தன. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 8 வி்க்கெட் இழப்புக்கு298 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. 272 ரன்கள் சேர்்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 120 ரன்களில் ஆட்டமிழந்து 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன் கடந்த 1986ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2014ம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் மட்டும் வென்றிருந்தது.

அதன்பின் 7 ஆண்டுகளுக்குப்பின் இப்போது கோலி தலைமையில் இந்திய அணி மீண்டும் வென்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவிய கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்தியா தரப்பில் வெற்றிக்கு காரணமாக அமைந்த சிராஜ் 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

உலகத்தரம்

லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி நாள் ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு மிகச்சிறந்த ஆட்டத்தைப் பார்த்த நிறைவை இந்திய பந்துவீச்சாளர்கள் வழங்கிவிட்டனர். என்ன மாதிரியான உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சு. இவ்வளவு அருமையான பந்துவீச்சு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலின்போது எங்கு போனது எனத் தெரியவில்லை. ஆடுகளம் மோசமானதால் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறவே முடியாது, இந்திய பந்துவீச்சாளர்கள் உலகத் தரம்வாய்ந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர்.

ஷமியின் அரைசதம்

ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பும்ரா,ஷமியின் பேட்டிங்கும், ஷமி, பும்ரா, சிராஜ், சர்மா ஆகியோரின் பந்துவீச்சும்தான். அதிலும் 9-வது விக்கெட்டுக்கு பும்ரா, ஷமி இணைந்து 89 ரன்கள் சேர்த்து இந்திய அணி தோல்வியிலிருந்து மீட்டார்கள் என்றுதான் கூற முடியும்.

கடந்த 2014-ம் ஆண்டு நாட்டிங்ஹாமில் 10-வது விக்கெட்டுக்கு புவனேஷ்வர் குமாருடன் சேர்ந்து ஷமி அரைசதம் அடித்ததுதான் கடைசி விக்கெட்டுக்கு அதிகபட்ச பாட்னர்ஷிப். அதன்பின் இந்த டெஸ்டில் பும்ராவுடன் சேர்ந்து ஷமி அரைசதம் அடித்தது 9-வது விக்கெட்டுக்கு அதிகபட்சமாகும்.

19 விக்கெட்டுகள்

இந்த டெஸ்ட் போட்டியில் 19 விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே வீழ்த்தினர். இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே வேகபந்துவீச்சாளர்கள் ஒரு டெஸ்டில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது இது 3-வது முறையாகும். இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டில் ஜோகன்னஸ்பெர்க்கில் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிராவும், கடந்த முதல் டெஸ்டிலும் 20 விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தியிருந்தார்கள்.

கபில்தேவ்-சிராஜ்

முகமது சிராஜின் பந்துவீச்சைக் குறிப்பிட்டே தீர வேண்டும். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை அள்ளிய சிராஜ், 2-வது இன்னி்ங்ஸில் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை சாய்த்து 4 விக்கெட்டுகளுடன் வெற்றிக்கான காரணகர்த்தாக்களில் ஒருவராக மிளிர்ந்தார். கடந்த 1982-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் கபில் தேவ் 8 விக்கெட் வீழ்த்தியதுதான் இந்திய வீரர்களில் அதிகபட்சம். அதை சிராஜ் தற்போது சமன் செய்து கபிலுக்கு இணையாகியுள்ளார்.

வீறுகொள்ளும் சிங்கங்கள்

ஆட்டத்தின் போக்கே தேநீர் இடைவேளைக்குப் பின்புதான் மாறியது. கடைசி செஷனில் மட்டும் இங்கிலாந்து அணி 6 வி்க்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது. கடைசிநாளில் கடைசி செஷனில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வீறுகொண்டு விளையாடுவது முதல்முறைஅல்ல.

கடந்த 2001ம் ஆண்டு கொல்கத்தா டெஸ்டில் கடைசி செஷனில் 7 விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் வீழ்த்தினர். 2016-ம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கடைசி செஷனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றனர்.

4 பேர்தான் காரணம்

ஆகவே, இந்திய அணிக்கு 7 ஆண்டுகளுக்குப்பின் லார்ட்ஸ் மைதானத்தில் கிடைத்த வெற்றிக்கு ஒட்டுமொத்த உரித்தானவர்கள் பும்ரா, ஷமி, சிராஜ், சர்மா ஆகிய 4 பேர்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்த 4 வீரர்களும் அதிகபட்சமான பங்களிப்பு செய்யாமல் இருந்தால், மொத்தமுள்ள 7 ேபரின் உழைப்பும் வீணாகியிருக்கும், ராகுலின், ரோஹித்சர்மா, புஜாரா, ரஹானேயின் உழைப்பும் வீணாகியிருக்கும்.

வெற்றிக்கு கோலி காரணமல்ல

விராட் கோலியின் சிறந்த கேப்டன்ஷிப்பால்தான் இந்த வெற்றி கிடைத்தது, அவரின் சாதுர்யமான முடிவு, பீல்டிங் செட்அப்பில்தான் வெற்றி கிடைத்தது என்று ஒட்டுமொத்த பெயரையும் கோலியிடம் தூக்கிக் கொடுத்துவிட முடியாது. கடந்த 2 டெஸ்ட் போட்டியிலும் கோலி என்ன பங்களிப்புச் செய்தார் என்பது தெரியும்.

விராட் கோலியைவிட ஷமி கடைசி வரிசையில் அருமையாக பேட் செய்து அரைசதம் அடித்தார். டெய்ல்என்டர்கள்தானே என்று உதாசீனப்படுத்தாமல், பும்ராவும், ஷமியும் பேட்டிங் கற்றுக்கொடுத்துவிட்டு சென்றனர். ஒட்டுமொத்தத்தில் பும்ராவும், ஷமியும் பேட்டிங்கில் 89 ரன்கள் சேர்க்கவில்லையென்றால் இந்தியாவின் நிலைமை பரிதாபமாக மாறியிருக்கும்.

பும்ரா ஷமி கூட்டணி

ரிஷப்பந்த் 14 ரன்களிலும், இசாந்த் சர்மா 4 ரன்னிலும் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பந்த் 22 ரன்னில் ராபின்ஸன் வெளியேறினார். அடுத்து ஷமி வந்்து சர்மாவுடன் சேர்ந்தார். இசாந்த் சர்மாவை 16 ரன்னில் ராபின்ஸன் வீழ்த்தினார்.

அவ்வளவுதான் இந்திய அணியின் கதை முடிந்தது என ரசிகர்கள் நினைத்திருந்தனர்!

9-வது விக்கெட்டுக்கு ஷமி, பும்ரா கூட்டணி சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆன்டர்ஸன், ராபின்ஸன், உட், சாம் கரன் ஆகியோருக்கு சிம்மசொப்னாக பேட் செய்தனர். என்ன மாதிரியான ஆட்டம், டிபென்ஸ், ஸ்ட்ரோக் ப்ளே, புல்ஷாட், கவர்டிரைவ் என தங்களின் பேட்டிங்கில் இருவரும் வெரைட்டி காட்டினர். அதிரடியாக ஆடிய ஷமி டெஸ்ட் அரங்கில் தனது 2-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

பும்ரா நிதானமாக ஆட, ஷமி அதிரடியாக ஷாட்களை ஆடத் தொடங்கியவுடன் ரூட் பீல்டிங் செட்அப்பை மாற்றத் தொடங்கினார்.

பழிவாங்கும் மனநிலையா?

டெய்லன்டர்கள்தானே என நினைத்து பவுன்ஸர்களா வீசி ஷமி, பும்ராவை காலி செய்ய பவுன்ஸர்களை வீசியது இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் செய்த தவறாகும். முதல் இன்னிங்ஸில் ஆன்டர்ஸன், ராபின்ஸனுக்கு பவுன்ஸர் வீசி கழுத்துவரை ஏற்றியதற்காக பழிவாங்கும் மனநிலையோடுதான் இங்கிலாந்து வீரர்கள் பந்துவீசினர்.

ஆனால் எந்தவிதத்திலும் அது பலிக்கவில்லை. ஆன்டர்ஸன், ராபின்ஸன் தேவையில்லாமல் பவுன்ஸர் வீசுகிறார்கள் எனத் தெரிந்து கடுப்பாகி, கேப்டன் ரூட் பெவிலியன் சென்றுவி்்ட்டார். பும்ராவும், ஷமியும் நிலைத்து நின்று ஆடியதற்கு இங்கிலாந்தி்ன் மோசமான பந்துவீச்சு முக்கியக் காரணம். பும்ரா 34 ரன்களிலும், ஷமி 56 ரன்களும் சேர்த்தனர். மதிய உணவு இடைவேளைக்குப்பின் 10 நிமிடங்களில் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கோலி அறிவித்தார்.

ஆரம்பமே அதிர்ச்சி

60 ஓவர்களில் 272 ரன்கள் அடிக்க வேண்டிய இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் ஓவரிலேயே பும்ரா தனது வேலையைத் தொடங்கினார். ஒரு பவுன்ஸரில் ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை பும்ராவும், அருமையான லெக் கட்டரில் சிப்ளி விக்கெட்டை ஷமியும் வீழ்த்தி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தனர்.

ஹசீப் ஹமீது, ரூட் இருவரும் விக்கெட் சரிவைத் தடுக்க முயன்றனர். ஆனால், யோசிக்கவே முடியாத அளவுக்கு இசாந்த் சர்மா பந்தில் கால்காப்பில் வாங்கி ஹமீது 9ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த பேர்ஸேடோவும்2 ரன்னில் இசாந்த் சர்மா பந்தில் கால்காப்பில் வாங்கி வி்க்கெட்டை இழந்தார்.

ஒவ்வொருவருராகச் செல்லவே கேப்டன் ரூட்டின் ஆனிவேர் பிடி நழுவத் தொடங்கியது. பும்ரா பந்துவீச்சில் 33 ரன்கள் சேர்த்தநிலையில் ரூட் ஸ்லிப்பில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வரிசையாக விக்ெகட்டுகள் வீழ்ந்தன.

விக்கெட் சரிவு

போராடிய பட்லர்25 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் வீழ்ந்தார். அதன்பின் மொயின் அலி(13), சாம் கரன்(0), ராபின்ஸன்(9) ஆன்டர்ஸன்(0) என மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 53 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது. 51.5 ஓவர்ளில் 120 ரன்களில் ஆட்டமிழந்து இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

இந்த டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் 7 பேர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். லார்ட்ஸ் மைதானத்தில் 7 பேட்ஸ்மேன்கள் டக்அவுட்டில் ஆட்டமிழப்பது 5-வது முறையாகும்.

இந்தியா தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷமி ஒரு விக்ெகட்டையும் வீழ்த்தினர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: