60 ரன்னுக்கு சுருண்டது நியூசிலாந்து: வங்கதேசம் அணி மிரட்டல்

Spread the love

தாகா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம் சென்றுள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. நேற்று, தாகாவில் முதல் போட்டி நடந்தது.

 

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணிக்கு டாம் பிளன்டெல் (2), ரச்சின் ரவிந்திரா (0), வில் யங் (5), கோலின் டி கிராண்ட்ஹோம் (1) ஏமாற்றினர். கேப்டன் டாம் லதாம் (18), ஹென்ரி நிக்கோல்ஸ் (18) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற நியூசிலாந்து அணி 16.5 ஓவரில் 60 ரன்னுக்கு சுருண்டது. வங்கதேசம் சார்பில் முஸ்தபிஜுர் ரஹ்மான் 3, சாகிப் அல் ஹசன், முகமது சைபுதின், நசும் அகமது தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு முகமது நைம் (1), லிட்டன் தாஸ் (1) மோசமான துவக்கம் தந்தனர். சாகிப் அல் ஹசன் (25) நம்பிக்கை தந்தார். முஷ்பிகுர் ரஹிம் (16*), கேப்டன் மகமதுல்லா (14*) கைகொடுக்க, வங்கதேச அணி 15 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 62 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை சாகிப் அல் ஹசன் வென்றார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: