50 ஆண்டுக்குப் பின்… * ஓவலில் இரண்டாவது வெற்றி

Spread the love

லண்டன்: ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுக்குப் பின் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. 

கடந்த 1971ல் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டில் அஜித் வடேகர் தலைமையிலான இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 355, இந்தியா 285 ரன் எடுத்து, 71 ரன் பின்தங்கியது. அடுத்து இங்கிலாந்து 101 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. 

இதன் பின் இங்கு களமிறங்கிய 8 டெஸ்டில் 3ல் தோற்றது. 5ஐ ‘டிரா’ செய்தது இந்தியா. தற்போது 50 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக ஓவல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 1971 போல முதல் இன்னிங்சில் பின்தங்கிய போதும், கடைசி நாளில் எழுச்சி பெற்று அசத்தியது.

 

இரண்டாவது ‘பெஸ்ட்’

ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்காக நான்காவது இன்னிங்சில் அதிக ரன் எடுத்த ஜோடி வரிசையில் பர்ன்ஸ்–ஹசீப் இரண்டாவது இடம் பெற்றனர். நேற்று இவர்கள் 100 ரன் எடுத்தனர். ஸ்டிராஸ் (58), அலெஸ்டர் குக் (67) ஜோடி 2008ல் 123 ரன் (தென் ஆப்.,) எடுத்தது.

 

சபாஷ் ஜடேஜா 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அரங்கில் குறைந்தபட்சம் 500 ரன்கள் எடுத்து 50 விக்கெட்டுகள் சாய்த்த நான்காவது இந்திய ‘ஆல் ரவுண்டர்’ ஆனார் ஜடேஜா. முதல் மூன்று இடங்களில்  வினு மன்கட், கபில் தேவ், அஷ்வின் உள்ளனர்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: