4,200க்கும் மேற்பட்ட சால்மன் மீன்கள் மடியக் காரணமான நீர்ப்பாசி

Spread the love


Images

  • boat algae

    (படம்: AFP)

சில்லியில், அபாயமான நீர்ப்பாசியால் 4,200க்கும் மேற்பட்ட சால்மன் மீன்கள் மாண்டன.

அப்பகுதியின் நீர்ப்பரப்பில் உயிர்வாயுவைப் பெருமளவு குறைக்கக்கூடிய அபாயமான நீர்ப்பாசி பெருகியுள்ளது.

அதனால், போதிய உயிர்வாயு கிடைக்காமல் மீன்கள் மூச்சுத்திணறிச் மடிந்ததாகக் கூறப்பட்டது.

சால்மன் மீன் வளர்ப்பினால் ஏற்படும் தூய்மைக்கேடே அவை மடியக் காரணம் என்று Greenpeace நிறுவனம் கூறி வருகிறது.

ஆனால், வானிலை மாற்றமே அதற்குக் காரணம் என்கிறது மீன் வளர்ப்புத்துறை.

உலகின் சால்மன் மீன் உற்பத்திக்குச் சுமார் 26 விழுக்காடு பங்களிக்கிறது சிலி. அங்குள்ள சுமார் 18 மீன் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *