`40 சென்ட்டில் 40,000 ரூபாய்!’ – ஒப்பந்த சாகுபடியில் கலக்கும் வெள்ளரி விவசாயிகள்| Salem farmers get good profit from contract farming in cucumber cultivation

Spread the love


நாங்க நாற்பது சென்ட் அளவுக்கு சீமை வெள்ளரி போட்டிருக்கிறோம். இதுவரை 40,000 ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கு. இதில் நிறுவனம் வழங்கும் உரம், பூச்சி மருந்து, விதைக்கான பணத்தை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகை நமக்குக் கொடுத்திடுறாங்க. பூச்சி மருந்து, விதை, உரம் போன்றவற்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகும். எரு, உழவு செலவு கணக்கிட்டால் பத்தாயிரம் ரூபாய் செலவாகும். மொத்தமாக 20,000 ரூபாய் செலவு போக 20,000 ரூபாய் லாபம் கிடைக்கும். லாபம் குறைவுன்னாலும் பயிர் செய்றதுக்கான முதலீடு, போக்குவரத்து வசதிகள கம்பெனிகளே கொடுக்கிறதால, ஒப்பந்த சாகுபடி செஞ்சுட்டு வர்றேன்” என்றார் நடராஜ்.

சீமை வெள்ளரி

சீமை வெள்ளரி

நாட்டு வெள்ளரி- சீமை வெள்ளரி ஒப்பீடு:

நாட்டு வெள்ளரிக்கும் சீமை வெள்ளரிக்கும் நடவு முறையிலேயே வேறுபாடு உண்டு. நாட்டு வெள்ளரி தரையிலேயே படரும் கொடி வகை. சீமை வெள்ளரிக்குக் கண்டிப்பாகக் கொடிக்கட்ட வேண்டும். நாட்டு வெள்ளரியை இரண்டு நாள்கள் அறுக்காமல் விட்டாலும் பிரச்னை இல்லை. ஆனால், ஜெர்கின் வெள்ளரியைத் தினமும் அறுவடை செய்ய வேண்டும். சீமை வெள்ளரி ரகத்துக்கு எவ்வளவு விலை கொடுப்பீங்க முன்கூட்டியே பேசி விட வேண்டும். நாட்டு வெள்ளரி ரகத்தை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்துவிடலாம். சீமை வெள்ளரியை உள்ளூர் சந்தையில் அவ்வளவு எளிதாக விற்பனை செய்ய முடியாது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *