2024 ஒலிம்பிக் விளையாட்டுச் சின்னம் கேலி செய்யப்படுகிறது…ஏன்?

Spread the love


Images

  • oLYMPIC lOGO

    (Twitter/Paris2024)

2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான சின்னம் இணையத்தில் அதிகம் கேலி செய்யப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளை ஏற்று நடத்தவிருக்கிறது.

அதனையொட்டி, புதிய சின்னம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

தங்கப் பதக்கத்தில் ஒலிம்பிக் விளையாட்டின் சுடர் எரிவதைப்போன்று சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சின்னத்தின் நடுவில் ஒரு பெண்ணின் முகம் இருப்பதைப் போலத் தென்படுகிறது.

அசைந்தாடும் சுடர் பெண்ணின் முடி, சுடர் நடுவில் பெண்ணின் உதடுகள்.

ஃபிரான்சில் சுதந்திரத்தின் அடையாளமாகவும் 1789-ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பிறகு
தோற்றுவிக்கப்பட்ட ஃபிரெஞ்சுக் குடியரசின் பிரதிபலிப்பாகவும் திகழ்பவர் மெரியென்.

அவரது முகத்தைப் போன்று சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அது சராசரி பிரெஞ்சுப் பெண்னைப் போன்று தோற்றமளிப்பதாக இணையவாசிகள் கருதுகின்றனர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *