மாற்றுத்திறன் மகளிரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் தமிழ் பெண்
மாற்றுத்திறனாளிகள் என்றால் அவர்களுக்கு ஒரு சிலர் காட்டும் மரியாதையும் அனுதாபமும் தற்காலிகமானதுதான். அதனால், தங்களுக்குத் தாங்களாகவே ஒரு சுய மரியாதையான வாழ்க்கையை தேர்வு செய்து கொள்ள முன்மாதிரி முயற்சியை தொடங்கினார் கடலூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான ஜெயக்கொடி. இதுவரை 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பெண்கள் தொழில் முனைவோராக இவர் உதவியிருக்கிறார். தனது வாழ்க்கை தன்னமபிக்கை கதையை பிபிசி தமிழிடம் அவர் இந்த காணொளியில் பகிர்ந்து கொள்கிறார்.