குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளில் நடைபெற்றத் தேர்தலில் பா.ஜ.க மாபெரும் வெற்றி  பெற்றுள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்துள்ளது.

குஜராத்திலுள்ள அகமதாபாத், வதோதரா, பாவ்நகர், ஜாம்நகர், சூரத், ராஜ்கோட்,  உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகளில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, உள்ளாட்சித் தேர்தல்  நடைபெற்றது. அதில், ஆறு மாநகராட்சிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 1.14 கோடி வாக்காளர்களில், 52.83 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் உள்ள 576 வார்டுகளில் 480 வார்டுகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது பாஜக.

அகமதாபாத்தில் உள்ள 192 வார்டுகளில் பா.ஜ.க 134 வார்டுகளிலும் காங்கிரஸ் 15 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ராஜ்கோட்டில் உள்ள 72 வார்டுகளில் பா.ஜ.க 68 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

வதோதராவில் உள்ள 76 வார்டுகளில் பா.ஜ.க 69 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

சூரத்தில் 120 வார்டுகளில்  பா.ஜ.க 93 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 5 வார்டுகளிலும், ஆம் ஆத்மி 17 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.பாவ் நகர் தொகுதியில்  52 வார்டுகள் கொண்ட பா.ஜ.க 44 வார்டுகளிலும் காங்கிரஸ் 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஜாம் நகரில்  64 வார்டுகளில் பா.ஜ.க 50 வார்டுகளிலும், காங்கிரஸ் 11 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

ALSO READ | Reliance-Future Deal: உச்சநீதி மன்ற தீர்ப்பினால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பின்னடைவு
 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *