Chinese (foreground) and Indian soldiers (R, background)

படக்குறிப்பு,

சீன அரசு ஊடகம் வெளியிட்ட காணொளியில் மோதல் நடந்த நேரத்தில் சீன ராணுவத்தினர் (படத்தின் முன்னால் இருப்பவர்கள்) மற்றும் இந்திய ராணுவத்தினர் (பின்னால் உள்ளவர்கள்)

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் கல்வன் பள்ளத்தாக்கில் நடந்த கைகலப்பில் உயிரிழந்த, சீன ராணுவ வீரர்களைக் குறித்து தன் கருத்தைப் பதிவிட்ட, க்வி (Qiu) என்கிற சீன வலைத்தள பதிவர் ஒருவரை கைது செய்திருக்கிறது சீன காவல் துறை.

38 வயதாகும் அந்த நபர், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் நடந்த மோதலை, “மிக மலினமாக உண்மையைத் திரித்துக் கூறினார்” என சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இப்படி கல்வான் மோதல் குறித்து தவறாகப் பேசியதாக சீனா தடுப்புக் காவலில் வைத்திருக்கும் ஆறு பேரில் இவரும் ஒருவர்.

2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்பட்ட இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான மோதல், 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *