தேக்கடி: பொதுப்பணித்துறை அலட்சியத்தால் பெரியாறு அணை தமிழக குடியிருப்புகளில் கேரள போலீசார் தங்குகிறார்கள். இதனால் தமிழகத்தின் மேலும் ஒரு உரிமை பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரியாறு அணை உள்ளது. அங்கு ஆய்வாளர் மாளிகை, அலுவலர் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் என 20க்கும் மேற்பட்டோர் அணைப்பகுதியில் தங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் 5க்கும் குறைவானவர்களே தங்குகின்றனர்.

latest tamil news

இதை பயன்படுத்தி அங்குள்ள 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கேரள போலீசார் தங்குகிறார்கள். அவர்களுக்கு தனி குடியிருப்பு இருப்பினும் இவ்வாறு நடந்து கொள்ள தமிழக பொதுப்பணித்துறையினரின் அலட்சியம் தான் காரணமாகும். எனவே மேலும் ஒரு உரிமையை தமிழகம் இழப்பதற்கு முன்பு நம் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *