
குழந்தையையும் கொலை செய்த பின்னர் இருவரது உடல்களையும் சாக்கு மூட்டையில் கட்டி கட்டுப் பகுதியில் முள்புதருக்குள் வீசிவிட்டு வந்தோம். அந்த சமயத்தில் கன மழை பெய்ததுடன், நாங்கள் உடல்களை வீசிய இடம், உயிரிழந்த விலங்குகளை வீசக்கூடிய பகுதி என்பதால் யாரும் சந்தேகம் அடையவில்லை. இவ்வளவு நாளுக்குப் பிறகு போலீஸிடம் மாட்டிக் கொள்வோம் என நினைத்துக் கூட பார்க்கவில்லை” எனக் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
வீரபாண்டியம்மாள் காட்டிய இடத்தில் இரு சாக்கு மூட்டைகள் கிடந்தன. 40 நாள்கள் ஆகிவிட்டதால் அதில் இருந்த உடல்கள் அழுகிவிட்டதால் அதே இடத்தில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே கோமதியம்மாள் மற்றும் குழந்தை உத்ரா கொலையில் வீரபாண்டியம்மாளின் மற்றொரு மகளான கோமதியம்மாள் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.