செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, அச்சரப்பாக்கம், இரும்புலி காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (40). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்துவருகிறார். இவரின் மனைவி ஜீவா (38). இந்தத் தம்பதியருக்கு பவித்ரா (18) என்ற மகள் இருக்கிறார். இவர் உத்தரமேரூரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். ஜீவாவுக்கும் அவரின் கணவர் பார்த்திபனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

கொலை

நேற்றிரவும் கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு ஜீவாவும் பவித்ராவும் தூங்கச் சென்றனர். ஆனால், பார்த்திபனுக்குத் தூக்கம் வரவில்லை. மனைவி மீதான ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ய பார்த்திபன் திட்டமிட்டார். அதற்காக அவர் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்துவந்தார். தூங்கிக்கொண்டிருந்த மனைவி ஜீவா மீது மண்ணெண்ணெயை பார்த்திபன் ஊற்றினார். அதனால் கண்விழித்த ஜீவா, சுதாரிப்பதற்குள் தீவைத்தார் பார்த்திபன். ஜீவாவின் உடலில் தீ பரவியதும் அவர் அலறித் துடித்தார். அந்தச் சத்தம் கேட்டு பவித்ரா கண்விழித்தார்.

தன் கண்முன்னால் அம்மா தீயில் கருகிக்கொண்டிருப்பதைப் பார்த்த பவித்ரா, அவரைக் காப்பாற்ற முயன்றார். அப்போது பவித்ராவின் மீதும் தீ பரவியது. இருவரும் தீயில் கருகத் தொடங்கினார். மனைவியும் மகளும் தீயில் எரிவதைப் பார்த்த பார்த்திபன், மனமுடைந்தார். பின்னர் அவரும் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அதனால் வீட்டுக்குள் மூன்று பேரும் தீயில் கருகினர்.

Also Read: செங்கல்பட்டு: `கழுத்தை அறுத்து, கார் ஏற்றிக் கொலை’ – மனைவியைக் கொடூரமாகக் கொன்ற டாக்டர்

வீடு முழுவதும் புகை மூட்டமானது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஜீவா உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பவித்ராவும் பார்த்திபனும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவரின் உடல் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சரப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். ஜீவாவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தீ

இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் மனைவி ஜீவா மீது பார்த்திபனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஜீவா, நீண்ட நேரம் போனில் பேசிவந்ததாகச் சொல்கிறார்கள். அதை பார்த்திபன் கண்டித்திருக்கிறார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆத்திரமடந்து, மனைவியை தீவைத்து எரித்துக் கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. இது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *