• முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

எடப்பாடி கே. பழனிசாமி: தன்னை நிரூபித்துக்கொண்ட முதலமைச்சர்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு, பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட வி.கே. சசிகலாவும் சிறைக்குச் சென்ற சூழலில் முதலமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டவர் எடப்பாடி கே. பழனிச்சாமி. ஒரு தேர்ந்த அரசியல்வாதி.

அ.இ.அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓ. பன்னீர்செல்வம். ஆனால், முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரால் ஒருபோதும் அ.இ.அ.தி.மு.கவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்ததில்லை.

ஆனால், முதலமைச்சராக வாய்ப்புக் கிடைத்த சில மாதங்களிலேயே கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எடப்பாடி கே. பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது, ஜெயலலிதா உயிரோடு இல்லை என்பது இதற்கு முக்கியக் காரணமாக இருந்தாலும், டி.டி.வி. தினகரன் தரப்பிலிருந்து மெல்லமெல்ல கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததன் மூலம் தன் அரசியல் சாணக்கியத்தனத்தை நிரூபித்தவர். இத்தனைக்கும் அவரது அரசியல் வாழ்வின் பெரும்பகுதி தேர்தல் தோல்விகளால் நிறைந்தது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *