லடாக்; இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சில், குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ள தாக தெரிகிறது.

அதே நேரத்தில், டெப்சாங், டெம்சோக் பகுதிகள் தொடர்பாக, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.கிழக்கு லடாக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக, இந்தியா – சீனா ராணுவத்தின் படைப் பிரிவு தளபதிகள் இடையேயான, 10வது சுற்று பேச்சு, நேற்று முன்தினம் நடந்தது. நேற்று அதிகாலை, 2:00 மணி வரையில், தொடர்ந்து, 16 மணி நேரம் பேச்சு நடந்தது.
ஏற்கனவே நடந்த, ஒன்பது சுற்று பேச்சுகளின் அடிப்படையில், பாங்காங் சோ ஏரி பகுதியில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், மற்ற இடங்களில் இருந்தும், படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.அதில், கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதில், இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கி கொள்வதில் உடன்பாடு ஏற்படவில்லை. இது தொடர்பாக மீண்டும் பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.படைப் பிரிவு தளபதிகள் இடையேயான பேச்சில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து, ராணுவ உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என, தெரிகிறது.
Advertisement