உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்

:

மரகதவல்லி, சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:

தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்யும், ஒரே முஸ்லிம் தலைவர், தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனர் இப்ராஹிம் தான். அவருக்கும் எவ்வளவு இடைஞ்சல் வருகிறது. ‘முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி, பா.ஜ., என, எதிர்க்கட்சிகளால் திட்டமிட்ட பொய் பிரசாரம் நடத்தப்படுகிறது.

‘கொரோனா’ தடுப்பு மருந்தை, வங்க தேசம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு, மோடி அரசு அனுப்பி வருகிறது. முஸ்லிம் விரோத அரசு என்றால் இப்படி செய்யுமா?’ என, கேள்வி எழுப்பியிருக்கிறார்.மோடி அரசு, இதுவரை சிறுபான்மையினருக்கு எதிராக என்ன செய்து இருக்கிறது? ஒன்றுமே இல்லை. அப்படியிருந்தும் ஏன், அக்கட்சி மீது பொய் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது.மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின், பா.ஜ., முக்கியமாக மூன்று விஷயங்களை செய்திருக்கிறது.முதலாவது, குடியுரிமை திருத்த சட்டம், இந்தியாவில் வாழும் ஒரு முஸ்லிமைக் கூட பாதிக்காது.

latest tamil news

இரண்டாவது, ‘முத்தலாக்’ தடை சட்டம். உலகிலுள்ள, 36 முஸ்லிம் நாடுகளே, முத்தலாக் சட்டத்தை தடை செய்துள்ளன. இந்தியாவும், அவ்வழியை பின்பற்றியுள்ளது.மூன்றாவதாக, காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அதற்கு பின், காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைந்தது.இதில் எதுவுமே, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லை. ஹிந்து மதத்திற்கும் பாதிப்பு ஏற்படும்போது, வேறு எந்த கட்சியும் முன்வந்து, அதை தடுக்க வருவதில்லை; பா.ஜ., வருகிறது. அதனால் எதிர்க்கட்சிகளுக்கு கோபம் வருகிறது.இப்ராஹிம் கருத்து ஏற்புடையதே. அடிப்படை மதவாதிகளிடம் இருந்து அவரை பாதுகாக்க வேண்டும்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *