2020 பருவத்தில் பிரிமியர் லீகில் வெளிநாட்டு விளையாட்டாளர்களுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும் – சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம்

Spread the love


சிங்கப்பூர் பிரிமியர் லீகின் காற்பந்துக் குழுக்கள் 2020 பருவத்திற்கு அதிகபட்சமாக நான்கு வெளிநாட்டு விளையாட்டாளர்களை ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்று சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது அதிகபட்சமாக 3 வெளிநாட்டு விளையாட்டாளர்களை மட்டுமே ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

அதிகபட்ச விளையாட்டாளர்களை ஒப்பந்தம் செய்தால், அவர்களில் ஒருவரின் வயது 2020 ஜனவரி முதல் தேதியன்று 21 அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.

சிங்கப்பூர் பிரிமியர் லீகில் தற்போது 9 குழுக்கள் உள்ளன. அவற்றில் ஏழு சிங்கப்பூர்க் குழுக்கள். ஜப்பானியக் குழுவான Albirex Niigata, புருணைக் குழுவான DPMM FC ஆகியவையும் பிரிமியர் லீகில் உள்ளன.  

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *