Spread the love
Images
ஜப்பானில், தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகளின் விற்பனை எதிர்பார்ப்பை மிஞ்சியிருப்பதாய்ப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த மாதம் நடந்த முதல் கட்ட உள்ளூர் நுழைவுச் சீட்டு விற்பனையில் 3.22 மில்லியன் சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
இந்த எதிர்பாரா வரவேற்பால், போட்டி ஏற்பாட்டாளர்கள் ஜப்பானியர்களுக்கு அடுத்த கட்ட விற்பனையில் மேலும் அதிக எண்ணிக்கையில் சீட்டுகளை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது.
அடுத்த கட்ட விற்பனை ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கிறது.
ஜப்பானியர்கள் போட்டிகளைத் தவறவிடக்கூடாது என்பதற்காக மூன்றாம் கட்ட நுழைவுச் சீட்டு விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2020 ஒலிம்பிக் போட்டிகளைக் காண 7.5 மில்லியன் வெளிநாட்டு ரசிகர்கள் நுழைவுச் சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.