Spread the love
Images
தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் இன்று வெளியிடப்பட்டன.
அடுத்த ஆண்டு இதே நாள் போட்டிகள் தொடங்குகின்றன.
அதையொட்டி இன்று நடந்த நிகழ்ச்சியில் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஒலிம்பிக் பதக்கங்களின் வடிவங்களை வெளியிட்டனர்.
இந்தமுறை பதக்கங்கள் மறுபயனீட்டு மின்னியல் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் விதம் பதக்கங்கள் வடிவமைக்கப்பட்டதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
பதக்கங்கள் 450 கிராம் முதல் 556 கிராம் வரை எடையுள்ளவை.