2008 மும்பை தாக்குதலுக்குப்பின் இங்கிலாந்து அணி செய்ததை மறந்துவிடக்கூடாது: இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை | Gavaskar welcomes BCCI’s offer, says India shouldn’t forget England’s gesture after 26/11 attacks

Spread the love


கடந்த 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப்பின் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடந்து கொண்டு வித்தை மறந்துவிடக்கூடாது, அதை மனதில் வைத்து இந்திய அணி நி்ர்வாகம் செயல்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நேற்று நடக்க இருந்தது.

ஆனால், இந்திய் அணியின் உடற்பயிற்சி வல்லுநருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்துவிட்டதாக இரு அணிகளின் வாரியங்களும் அறிவி்க்கவி்ல்லை. மாறாக இந்த டெஸ்ட் தொடரில் கடைசிப் போட்டி எப்போது நடத்தலாம் என்பதற்கான தேதி பின்னர் அறிவி்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலின்போது, இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் பயணம் செய்து விளையாடி வந்தனர். நவம்பர் 26-ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, கட்டாக்கில் இந்தியா, இங்கிலாந்து ஒருநாள் போட்டி நடந்தது.

இந்தத் தாக்குதலுக்குப்பின் ஒருநாள் தொடரை ரத்து செய்து இங்கிலாந்து வீரர்கள் தாயகம் புறப்பட்டனர். ஆனால், டெஸ்ட் தொடருக்காக மீண்டும் இங்கிலாந்து அணி இந்தியா வந்தனர். அந்தத் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணிவென்றது. இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்நடத்தப்பட்ட சம்பவத்துக்குப்பின் இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் தொடரை ரத்துசெய்யாமல் டெஸ்ட் தொடரில் பங்கேற்று தங்களின் ஒப்பந்தத்தை முடித்தனர். இதை இந்திய அணியும் பின்பற்ற வேண்டும் என சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் சேனலுக்கு சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

இந்தியா, இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டாலும், பின்னர் விளையாடப்படும் எனபிசிசிஐ முடிவு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய அன்று கட்டாக்கில் இந்தியா, இங்கிலாந்து இடையே ஒருநாள் தொடர் நடந்து வந்தது.

இந்தத் தாக்குதலுக்குப்பின் இங்கிலாந்து அணி தாயகம் புறப்பட்டனர். ஆனால், பாதுகாப்பு சூழல் கருதி டெஸ்ட் தொடரை விளையாடாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால் இங்கிலாந்து அணியினர் மீண்டும் இந்தியா வந்து டெஸ்ட் தொடரில் விளையாடினர். அந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

இந்த சம்பவத்தில் கெவின் பீட்டர்ஸன் தலைமையிலான இங்கிலாந்து அணியை ஒருபோதும் மறக்க முடியாது. அவர்தான் இங்கிலாந்து அணியில் பிரதான வீரர். ஒருவேளை கேப்டன் பீட்டர்ஸன் இங்கிலாந்து வாரியத்திடம் நான் இந்தியா செல்ல முடியாது, பாதுகாப்பு இல்லை என்று தெரிவி்த்திருந்தால், அனைத்தும் முடிந்திருக்கும்.

ஆனால், கெவின் பீட்டர்ஸன் இந்தியாவுக்கு செல்ல விரும்பினார், மற்ற வீரர்களையும் சமாதானப்படுத்தி தொடருக்கு தயாராக்கினார். இங்கிலாந்து அணி மீண்டும் இந்தியா வந்தது, டெஸ்ட்தொடரில் விளையாடியது. சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் 380 ரன்களை இந்திய அணி சேஸிங் செய்த அருமையான டெஸ்ட் ஆட்டமும் நடந்தது. ஆதலால், இங்கிலாந்து அணி செய்ததை மறந்துவிடாமல் நாமும் ரத்தான கடைசி டெஸ்ட்போட்டியில் மீண்டும் விளையாட வேண்டும்.

ஆதலால், இங்கிலாந்து அணியும், நிர்வாகமும் செய்த செயலை மனதில் வைத்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் செயல்பட வேண்டும். மீண்டும் டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது நல்ல விஷயம். ரத்து செய்யப்பட் 5-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்தபின் நடத்திக்கொள்ளலாம். ஐபிஎல் முடிந்தபின் இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்று ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி தொடரை முடிக்கலாம். இந்த விஷயத்தில் இரு அணி நிர்வாகத்தினரும் நட்புணர்வோடு செயல்பட வேண்டும்

இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: