2 வாரங்களுக்கு முன்னதாகவே முடிவடைந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

Spread the love5 மாநில தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், முன்கூட்டியே கூட்டத்தொடரை முடிக்கும்படி பல்வேறு எம்பிக்கள் வலியுறுத்தினர்.

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் விவாதம் நடைபெற்றது. ஏப்ரல் 8ம் தேதி வரை 2 அமர்வுகளாக கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரண்டாவது அமர்வு தொடங்கிய பின்னர், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும், 5 மாநில தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும், முன்கூட்டியே கூட்டத்தொடரை முடிக்கும்படி பல்வேறு எம்பிக்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் சுமார் 2 மாத காலமாக நடைபெற்று வந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 வாரங்களுக்கு முன்னதாகவே இன்றுடன் நிறைவடைந்தது. பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. 


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *