121 ஆண்டுகளுக்கு முன் விக்டோரியா அரசியார் அன்பளிப்பாகக் கொடுத்த சாக்லெட்… இன்னும் அப்படியே…

Spread the love121 ஆண்டுகளுக்கு முன், தென்னாப்பிரிக்காவில் போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு விக்டோரியா அரசியார் அன்பளிப்பாகக் கொடுத்த சாக்லெட் அப்படியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது 2ஆம் Boer போரில் சண்டையிட்ட ஹென்ரி எட்வர்ட் பாஸ்டன்-பெடிங்ஃபீல்டிங்கிற்குச் (Sir Henry Edward Paston-Bedingfield) சொந்தமானது.

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள அவருடைய 500 ஆண்டுப் பழைமையான வீட்டில், ஒரு தலைக்கவச உறையில் அது கண்டுபிடிக்கப்பட்டது.

அது சாப்பிடுவதற்கான நிலையில் இல்லாவிட்டாலும் கை படாமல் இருப்பதால், அது ஒரு அபூர்வமான கண்டுபிடிப்பு என்று மரபுடைமை அறநிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அன்னா ஃபோர்ரஸ்ட் (Anna Forrest) கூறினார்.

சாக்லெட் பெட்டியில், “புத்தாண்டு வாழ்த்துகள்” என்றும் “தென்னாப்பிரிக்கா 1900” என்றும் விக்டோரியா அரசியாரின் கையெழுத்தில் எழுதப்பட்டுள்ளது.

போரில் கலந்துகொண்ட ஞாபகமாக ஹென்ரி, அதை வைத்திருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அவருடைய மகள், தமது 100வது வயதில் சென்ற ஆண்டு இறந்த பின், அவருடைய உடைமைகளில் அந்தச் சாக்லெட்டும் தலைக்கவச உறையும் கண்டுபிடிக்கப்பட்டன.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *