12 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு COVID-19 தடுப்பூசி – சோதனைகளைத் தொடங்கியது Pfizer-BioNTech

Spread the love


Pfizer-BioNTech நிறுவனங்கள்
12 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு COVID-19 தடுப்பூசி சோதனைகளைத் தொடங்கியுள்ளன.

2022ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அவ்வயதுப் பிரிவினருக்குத் தடுப்பூசிகளைப் போடுவதற்கு அவை திட்டமிட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை தொண்டூழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு சோதனைகள் தொடங்கின.

ஆக இளம் வயதாக 6 மாதக் குழந்தையும் சோதனையில் உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு Pfizer-BioNTech தடுப்பூசிகள் போட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டுந்தான் 16, 17 வயதினருக்கு Pfizer-BioNTech தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

மற்ற நாடுகளில் அதற்கு ஒப்புதல் இல்லை.

Moderna நிறுவனமும் குழந்தைகளிடம் கொரோனா தடுப்பூசிப் பரிசோதனைகளைச் செய்துவருகிறது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *