ஹேசல்வுட் ‘ரெடி’: சென்னை அணி உறுதி

Spread the love


துபாய்: ஐ.பி.எல்., தொடரில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் சென்னை அணி சார்பில் பங்கேற்பது உறுதியானது.

இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. இதில், சென்னை அணியில் ரூ. 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் விலகினார். இவருக்கு பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ப் சேர்க்கப்பட்டார். ஆனால் இவர், ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

இத்தொடருக்கான மீதமுள்ள போட்டிகள் வரும் செப். 19ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) துவங்குகின்றன. இதில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹேசல்வுட், சென்னை அணிக்காக பங்கேற்பதை உறுதி செய்தார். கடந்த சீசனில் இவர், சென்னை சார்பில் 3 போட்டியில் விளையாடினார்.

இதுகுறித்து சென்னை அணி சார்பில் வெளியான அறிக்கையில், ‘‘எமிரேட்சில் நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பதை ஹேசல்வுட் உறுதி செய்துள்ளார். இதற்கு பி.சி.சி.ஐ., சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவரது வருகையால் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சு பலமடைந்துள்ளது,’’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

பிலிப்ஸ் தேர்வு

ஐ.பி.எல்., தொடருக்கான ராஜஸ்தான் அணியில் இருந்து இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், சொந்த காரணங்களுக்காக விலகினார். இவருக்கு பதிலாக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ் 24, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை 25 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் (506 ரன்) விளையாடி உள்ள பிலிப்ஸ், கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணியில் உள்ளார்.

ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் இல்லாத நிலையில் பட்லர் விலகியது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமையலாம்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: