ஹிட்மேனை டெஸ்ட் மேனாக்கிய முதல் ஓவர்சீஸ் சதம்! எப்படிச் சாதித்தார் ரோஹித் ஷர்மா? | How Rohit Sharma meticulously planned his first overseas hundred?

Spread the love

எட்டு ஆண்டுகள் ஆகியும் ஒரு ஓவர்சீஸ் சதம்கூட ரோஹித்தின் கணக்கில் ஏறாமல் இருந்தது. SENA நாடுகளுக்கு அடுத்ததாக வரலாம். துணைக் கண்டத்தில் கூட, அவரது பேட் ஒரு செஞ்சுரி செலிப்ரேசனைப் பார்த்ததில்லை. இதுவே, ரோஹித் ரெட் பால் கிரிக்கெட்டுக்கான மெட்டீரியல் இல்லை எனப் பல விமர்சனங்களை, பல சமயங்களில் கிளப்பியது. அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி நம்பத்தகுந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாகத் தன்னை நிரூபித்திருந்த ரோஹித், தற்போது எட்டாண்டுக் காத்திருப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்து, தனது முதல் ஓவர்சீஸ் சதத்தையும் பதிவேற்றி, தன்னைத்தானே அடுத்த உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே, ரோஹித் எப்படியும், இதனை நிகழ்த்துவார் என்ற ஆருடங்கள் கணிக்கப்பட்டன. இரண்டு அரைசதங்களை, முதல் மூன்று போட்டிகளில் அடித்திருந்தார். அதில் ஒருமுறை 83 ரன்களோடு, சதத்தை, பக்கத்தில் சென்று கூடப் பார்த்தும் விட்டார். ஆனாலும், அவரது பல(வீன)ம் ஆன புல் ஷாட்டை வைத்தே அவருக்குக் குறி வைத்து, ஷார்ட் பால்களால் அவரது கதையை முடித்திருந்தது இங்கிலாந்து படை.

ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா

இந்த நிலையில், நடைபெற்று வரும் நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்சிலும், 11 ரன்களோடு வெளியேறி ஏமாற்றம் அளித்தார் ரோஹித். நங்கூரமிட்ட தாக்கூரால், இந்தியா மீண்டு வந்தாலும், ஓப்பனர்களை நோக்கியே விரல்கள் குற்றஞ்சாட்டி நீண்டன. அதோடு, இத்தொடரிலும் அவரது சதம் எப்படியும் தவறும், அதை வைத்து அவர்மீது விமர்சனங்களைக் கணையாக்கி வீசலாம் எனவும் ஒரு கூட்டம் காத்துக் கொண்டுதான் இருந்தது. அத்தகைய நிலையில்தான் ரோஹித் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கினார். ஆனால், ரோஹித் சமீபத்தில், “மூன்றிலக்கத்தின் மீது எனக்குக் கவலையில்லை, அணியின் நலத்திலேயே என் கவனம்” எனக் கூறி இருந்தார். இந்த இன்னிங்சிலும், அவரது அணுகுமுறை அப்படியானதாகவே இருந்தது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: