ஸ்வெரேவ் சாம்பியன்: மெக்சிகோ ஓபனில்

Spread the love


அகபுல்கோ: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ஜெர்மனியின் அலெக்சாண்டேர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

மெக்சிகோவில், ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், கிரீஸ் வீரர் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ் மோதினர். முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றி ஸ்வெரேவ், ‘டை பிரேக்கர்’ வரை நீடித்த 2வது செட்டை 7–6 என தன்வசப்படுத்தினார். முடிவில் ஸ்வெரேவ் 6–4, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டு தனது முதல் பட்டம் வென்ற ஸ்வெரேவ், ஒட்டுமொத்தமாக 14வது ஏ.டி.பி., பட்டத்தை தட்டிச் சென்றார்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *