ஸ்ரேயாஸ் வருகை பலம்: தவான் உற்சாகம்

Spread the love

துபாய்: ‘‘ஸ்ரேயாஸ் வருகையால் எங்கள் டில்லி அணி பலமடைந்துள்ளது,’’ என, ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 26. ஐ.பி.எல்., தொடருக்கான டில்லி அணிக்கு கேப்டனாக உள்ளார். கடந்த சீசனில் டில்லி அணியை பைனல் வரை அழைத்துச் சென்ற இவருக்கு, மார்ச் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் இவரால், இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசனில் பங்கேற்க முடியவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட இவர், எமிரேட்சில் நடக்கவுள்ள மீதமுள்ள ஐ.பி.எல்., போட்டிகளில் களமிறங்க காத்திருக்கிறார்.

 

இதுகுறித்து டில்லி அணியின் சீனியர் வீரர் ஷிகர் தவான் கூறியது: டில்லி அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பியதில் மகிழ்ச்சி. இவரது வருகையால் எங்கள் அணி பலமடைந்துள்ளது. சிறந்த வீரரான இவர், அணியின் வெற்றிக்கு கடைசி வரை போராடக் கூடியவர். இத்தொடருக்காக கடினமாக பயிற்சி மேற்கொண்டு, சிறப்பான முறையில் தயாராகி வருகிறோம். போட்டியில் விளையாட மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.

தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டியது அவசியம். இனிவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது என்பதால், எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல் முழுத்திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற போராடுவோம். எங்களது உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு தவான் கூறினார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: