ஸ்மித், வார்னர் தேர்வு: ஆஸி., அணி அறிவிப்பு

Spread the love

மெல்போர்ன்: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர், கம்மின்ஸ் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவில் நடக்க இருந்த ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 7வது சீசன், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), ஓமனில் வரும் அக். 17 – நவ. 14ல் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிந்த விண்டீஸ், வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்காத ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாற்று விக்கெட் கீப்பராக ஜோஷ் இங்லிஸ் 26, இடம் பிடித்துள்ளார். இதுவரை 63 ‘டுவென்டி–20’ போட்டியில் விளையாடி உள்ள இவர், சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதில்லை.

மாற்று வீரர்களாக டான் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் தேர்வாகினர். கேப்டனாக ஆரோன் பின்ச், துணை கேப்டனாக கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸி., அணி: ஆரோன் பின்ச் (கேப்டன்), பாட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), ஆஷ்டன் ஏகார், ஜோஷ் ஹேசல்வுட், ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), மாத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்சல் ஸவெப்சன், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: