ஸ்டூவர்ட் பின்னி ஓய்வு

Spread the love

புதுடில்லி: இந்தியாவின் ஸ்டூவர்ட் பின்னி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னி 37. கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இவர், 2014ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்தார். ‘ஆல்–ரவுண்டரான’ இவர், இதுவரை 6 டெஸ்ட் (194 ரன், 3 விக்கெட்), 14 ஒருநாள் (230 ரன், 20 விக்கெட்), 3 சர்வதேச ‘டுவென்டி–20’ (35 ரன், 1 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

கடந்த 2014ல் வங்கதேசத்துக்கு எதிராக 4.4 ஓவரில் 4 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் சாய்த்த ஸ்டூவர்ட் பின்னி, ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற சாதனை படைத்தார். ஐ.பி.எல்., அரங்கில் மும்பை, ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்காக விளையாடினார்.

 

கடைசியாக 2016ல் விண்டீசுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் விளையாடிய ஸ்டூவர்ட் பின்னி, முதல் தரம், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இவர், இந்திய அணியின் முன்னாள் ‘ஆல்–ரவுண்டர்’ ரோஜர் பின்னியின் மகன்.

இதுகுறித்து ஸ்டூவர்ட் பின்னி கூறுகையில், ‘‘முதல் தரம், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்தியாவுக்காக விளையாடியதில் மகிழ்ச்சி. இதனை எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன்,’’ என்றார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: