ஷமி, பும்ரா ஆடிய அந்த 20 ஓவர்கள் – வரலாற்றுப் பக்கங்களுக்கான சரித்திர நிகழ்வு! | Shami and Bumrah classics – The 20 overs that India would never forget

Spread the love

அப்போது அவர்களிடத்தில் ‘உங்களின் மறக்க முடியாத தருணம் எது’ என்ற கேள்வியைக் கேட்டால், பேட்ஸ்மேன்களை அசைத்துப் பார்த்த ஸ்பெல்களையோ, ஸ்டம்புகளைப் பதம் பார்த்த டெலிவரிகளையோ அவர்கள் சொல்லமாட்டார்கள். தங்கள் பந்துவீச்சால் இந்தியா பெற்ற வெற்றிகளையோ, அவர்கள் வென்ற விருதுகளையோ சொல்லமாட்டார்கள். தாங்கள் எப்போதும் குறிவைக்கும் பேட்டை, ஆயுதமாய் கையில் ஏந்தி, லார்ட்ஸ் எனும் மாபெரும் போர்க்களத்தில் இங்கிலாந்து பௌலர்களையும், ஃபீல்டர்களையும் பந்தாடிய அந்த 20 ஓவர்கள்… நிச்சயம் அதைத்தான் தங்களின் மறக்க முடியாத தருணமாக இருவரும் சொல்வார்கள். ஏன், எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் ஷமி, பும்ரா என்ற இருவரின் பெயரையும் ஒரு சேரக் கேட்கும்போது நமக்கும் அந்த 20 ஓவர்கள்தான் நினைவுக்கு வரும். இங்கிலாந்து ரசிகர்களால்கூட மறக்க முடியாத ஒரு மகத்தான சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் அவர்கள். அது சம்பவம் இல்லை, சரித்திரம்!

Bumrah tested Anderson with frequent bouncers

Bumrah tested Anderson with frequent bouncers
AP

ஐந்தாம் நாளின் முதல் செஷனில் இந்த இரண்டு பௌலர்களும் பேட்டைப் பிடித்து நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேட் செய்வது இந்தியாவின் முன்னிலையை அதிகரிக்கும், போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் தாண்டி, பற்றியெறிந்துகொண்டிருக்கும் ஈகோ யுத்தத்தில் கடைசியாகச் சிரிக்கப் போவது யார் என்ற கேள்வியும் இருந்தது. முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனுக்கு பும்ரா பவுன்சர்களாக வீசி அவர் சூடாக, இப்போது பும்ராவைப் பதம் பார்க்கக் காத்திருந்தது இங்கிலாந்து.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: