‘வேலையிட மனவுளைச்சலை’ சிகிச்சை தேவைப்படும் நிலையாக வகைப்படுத்தியது உலக சுகாதார நிறுவனம்

Spread the loveImages

  • stress ph

உலக சுகாதார நிறுவனம், ‘வேலையிட மனவுளைச்சலை’ சிகிச்சை தேவைப்படும் நிலையாக வகைப்படுத்தியுள்ளது.

ஜெனீவாவில் கூடிய வல்லுநர்கள் வேலையிட மனவுளைச்சலை வரையறுப்பதன் தொடர்பில் நடத்திய கலந்துரையாடலில் அவ்வாறு முடிவெடுக்கப்பட்டது.

நிறுவனம் முதல்முறையாக, வேலையிட மனவுளைச்சலை அனைத்துலக நோய்ப் பட்டியலில் சேர்த்துள்ளது.

அடையாளம் காணப்படவேண்டிய நோய்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.

சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்கள் சரிபார்ப்புக் குறிப்பேடாக அதனைப் பயன்படுத்துவதுண்டு.

வேலையிடத்தில் தொடர்ந்து ஏற்படும் மனஅழுத்தம் சரியாகக் கையாளப்படாததன் விளைவு என்று அந்தப் பட்டியல் ‘வேலையிட மனவுளைச்சலை’ வரையறுத்துள்ளது.

எப்போதும் சோர்வாக உணருவது, வேலை தொடர்பான மனக்குறை, செயல்திறன் குறைபாடு போன்றவை அதற்கான அறிகுறிகள் என்று கூறப்பட்டுள்ளது. 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *