வெள்ளம் சூழ்ந்த போதும்… திருமணம் செய்து கொண்ட தம்பதி!

Spread the love

ஆஸ்திரேலியாவில் கடந்த 60 ஆண்டுகளில் காணாத அளவு கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இருவர் திருமணம் செய்து கொள்வதை அதனாலும் நிறுத்தமுடியவில்லை!

அது குறித்து The Guardian செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

கேட் ஃபோதரிங்ஹெம் (Kate Fotheringham) எனும் பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

சுமார் 3 மாதங்களாகத் திட்டமிட்ட மண நாளை வெள்ளம் அலைக்கழிக்கும் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

காலையில் எழுந்தபோது, நகரில் வெள்ளம் சூழ்ந்திருப்பதை உணர்ந்தார் கேட்.

திருமணம் இன்னொரு நகரில் நடைபெறவேண்டிய நிலையில்,மற்ற நகரங்களை இணைக்கும் பாலமும் தண்ணீரில் மூழ்கியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார்.

திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்குப் பாலத்தைக் கடந்து செல்வதே ஒரே வழி.

குறித்த நாளில் திருமணம் நடக்க வேண்டும் என்று தீர்மானித்தார் கேட்.

உடனே ஹெலிகாப்டர் சேவையைத் தேடத் தொடங்கி Twitter-இலும் உதவி கோரினார்.

உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் அவரை அணுகி, ஹெலிகாப்டருக்கு ஏற்பாடு செய்ததாக The Guardian குறிப்பிட்டது.

திருமணம் நடக்கவிருந்த இடத்திற்கு செல்ல வழி கிடைத்தது…

இனிதே நடந்து முடிந்தது அவரது திருமணம் !

வெள்ளத்தில் மூழ்கிய பாலத்திற்கு முன், தம்பதி எடுத்துக்கொண்ட படத்தைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *