வெளியேறுகிறாரா ரவி சாஸ்திரி * உலக கோப்பை தொடருக்குப் பின் …

Spread the love

புதுடில்லி: இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் தொடர விருப்பம் இல்லை என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்திய அணி முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி 59. கடந்த 2014 இங்கிலாந்து தொடரில் இந்திய அணி இயக்குனராக சென்றார். 2016 வரை இது தொடர்ந்தது. கோஹ்லியுடன் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பின் கும்ளே விலகினார். ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனார். 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்றது.

இவரது பயிற்சியில் இந்தியா அன்னிய மண்ணில் சாதித்த போதும், ஒருமுறை கூட உலக கோப்பை தொடரில் சாதிக்கவில்லை. முதன் முறையாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா, நியசிலாந்திடம் தோற்றது. 2019 உலக கோப்பை தொடருடன் இவரது பதவிக்காலம் முடிந்த போதும், கேப்டன் கோஹ்லி விருப்பத்தின் படி வரும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் (அக். 17–நவ. 14) வரை, மீண்டும் பதவி நீட்டிக்கப்பட்டது.

இத்தொடருக்குப் பின் ஒப்பந்தம் முடிந்ததும், மீண்டும் பயிற்சியாளர் பதவியில் தொடர விருப்பம் இல்லை என ரவி சாஸ்திரி, இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகின. இவருடன் விக்ரம் ரத்தோர் (பேட்டிங்), பாரத் அருண் (பவுலிங்), ஸ்ரீதர் (பீல்டிங்) என அனைவரும் ஒட்டுமொத்தமாக விலக முடிவு செய்துள்ளனராம். இதன் பின் ஏதாவது ஒரு ஐ.பி.எல்., அணியில் மட்டும் பயிற்சியாளராக தொடர திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

அடுத்து யாரு

ரவி சாஸ்திரி விலகும் பட்சத்தில் வரும் நவம்பர் மாதம் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். ஒருவேளை இலங்கை தொடரில் பணியாற்றிய டிராவிட், விருப்பம் தெரிவித்தால் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்படலாம்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: