வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 பேருக்கு நேற்று நோய்த்தொற்று – விவரங்கள்

Spread the love

சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதியான 17 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

உள்ளூர் அளவில் தொடர்ந்து 13ஆவது நாளாக COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகவில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள்….

சிங்கப்பூரர் – 1

இந்தியாவிலிருந்து நாடு திரும்பினார். 42-வயதான அவர் மார்ச் 24ஆம் தேதி சிங்கப்பூர் வந்தார், அன்றே அவருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

சிங்கப்பூர் நிரந்தரவாசி – 1

இந்தியாவிலிருந்து வந்தவர்.

சிங்கப்பூர்வாசியைச் சார்ந்திருக்கும் அனுமதி அட்டை வைத்திருப்பவர் – 1

நேப்பாளத்திலிருந்து சிங்கப்பூர் வந்தார்.

வேலை அனுமதி அட்டையின் கீழ் வந்தவர்கள் – 2

அவர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.

வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் – 11

பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். அவர்களில் 7 பேர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்.

17 பேரும், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் பரிசோதிக்கப்பட்டனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: