வீட்டிலிருந்து வேலைசெய்ய, விண்ணப்பிக்க வேண்டும்: Google

Spread the love


Google நிறுவனம், அதன் அமெரிக்க அலுவலகங்களின் ஊழியர்கள் ஆண்டுக்கு 14 நாள்களுக்கு மேல் வீட்டிலிருந்து வேலைசெய்ய விரும்பினால் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

தற்போது, செப்டம்பர் மாதம் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்.

எனினும், அடுத்த மாதம் முதல் விருப்பப்படும் ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்பலாம் என்று நிறுவனம் தெரிவித்தது.

சென்ற ஆண்டு, கிருமிப்பரவல் மோசமடைந்தபோது, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறையைச் செயல்படுத்திய முதல் சில நிறுவனங்களில் Googleலும் ஒன்று.

செப்டம்பர் மாதத்திலிருந்து, ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது 3 நாள்களாவது அலுவலகத்திற்குச் செல்லவேண்டும்.

அலுவலகத்திற்கு ஊழியர்கள் தங்கள் நாய்களையும் அழைத்துச் செல்லலாம் என்று BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டும், 12 மாதங்கள் வரை வீட்டிலேயே வேலைசெய்வதற்கு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று Google சொன்னது.

இதற்கிடையில், Twitter தனது பெரும்பாலான ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று கூறியது.

மேலும் சில நிறுவனங்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்தும் அலுவலகத்திலிருந்தும் மாறி மாறி வேலைசெய்யும் நடைமுறையைச் சோதிக்கத் திட்டமிட்டுள்ளதாக BBC குறிப்பிட்டது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *