விராட் கோலி இருக்கும்போது டெஸ்ட் கிரிக்கெட் நீண்டகாலம் வாழும்:  ஷேன் வார்ன் புகழாரம் | Kohli has got respect of all his players, they back him: Warne

Spread the love


இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களின் மதிப்பையும், ஆதரவையும் கோலி பெற்றுவிட்டார் அவருக்காக விளையாட மற்ற வீரர்கள்விரும்புகிறார்கள், அவரின் தலைமையை விரும்புகிறார்கள் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திேரலிய முன்னாள் வீரர் ேஷன் வார்ன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “ கோலி அனைவரும் நிமிர்ந்து பார்க்கிறார்கள், அனைத்து வீரர்களின் ஆதரவையும் கோலி பெற்றுவிட்டார்.

கோலிக்கு ஆதரவாக அனைத்து வீர்ரகளும் இருக்கிறார்கள், அவருக்காக விளையாடுகிறார்கள். அணி தனக்காக விளையாடுவது என்பது கேப்டனுக்கு முக்கியமானது. விராட் கோலியின் நடத்தைதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். நன்றி விராட் கோலி. அணியை நீங்கள் வழிநடத்தும் விதம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் நம்பிக்கை, நம்பகத்தன்மை முக்கியமானது. அந்த நம்பிக்கையை அணிக்கு கோலி அளித்துள்ளார், விராட் கோலி இருக்கும்போது டெஸ்ட் கிரிக்கெட் நீண்டகாலம் வாழும்” எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் வெற்றி குறித்து ஷேன் வார்ன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மிகச்சிறந்த வெற்றி பெற்ற விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துகள். கடந்த 12 மாதங்களாக அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாதித்துவரும் அனைத்தும் அற்புதமானவை. உலகளவில் டெஸ்ட் போட்டியில் சிறந்த அணியாக இந்திய அணி இருக்கிறது, இந்த டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு தகுதியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் நீண்டகாலம் வாழ வேண்டும்” எனத் தெரிவி்த்தார்

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: