விமான நிலையத்திலிருந்த பயணப்பையில் 185 ஆமைகள்

Spread the love


கலாபாகோஸ் தீவுகளின் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஆமைகள் நிறைந்த பயணப்பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நடத்தப்பட்ட சோதனையில் ஈக்குவாடோர் செல்லவிருந்த பயணப்பையில் 185 ஆமைகள் இருந்ததாக சுற்றுப்புற அமைச்சு அதன் Twitter பக்கத்தில் தகவல் அளித்தது.

காவல்துறை அதுபற்றி விசாரணை நடத்தி வருகிறது.

தீவுகளிலிருந்து விலங்குகளைக் கடத்துவது சட்டப்படி குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 1இலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

தனித்துவமான தாவரங்களும், உயிரினங்களும் பாதுகாக்கப்படும் இடமாகத் திகழ்கிறது கலாபாகோஸ் தீவு.

சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கு ஆமைகள் உலவித் திரிவதாக நம்பப்படுகிறது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *