விமானத்தில் வாழையிலை உணவா? – TamilSeithi News & Current Affairs

Spread the loveImages

  • banana leaf

    படம்: Pixabay 

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பிரிட்டனின் Priestman Goode நிறுவனம், விமானப் பயணிகளுக்கு வாழையிலையில் சாப்பிடும் அனுபவத்தைத் தரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

விமானத்தில் பயணிகள் விட்டுச் செல்லும் உணவு, பிளாஸ்டிக் போன்ற கழிவுகளைக் கணிசமாக குறைப்பது அதன் நோக்கம்.

ஒவ்வொரு விமானப் பயணியும், சராசரியாக சுமார் 1.36 கிலோகிராம் கழிவுகளை விட்டுச் செல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 4 பில்லியன் பேர் விமானப் பயணம் மேற்கொள்கின்றனர்.

அதனால் கழிவுகளின் அளவு அதிகம் என்பதை நிறுவனம் சுட்டியது.

எனவே, விமானத்தில் உணவு பரிமாறப் பயன்படுத்தப்படும் தட்டுகளைப் பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக மறுபயனீட்டுப் பொருள்களைக் கொண்டு உருவாக்க Priestman Goode நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வாழையிலை, காப்பித்தூள் சக்கை, தென்னை மரத்தின் பாகங்கள் போன்றவற்றை  பயன்படுத்துவதன் மூலம் பயண அனுபவம் மேம்படும் என்பது நிறுவனத்தின் நம்பிக்கை.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *